தளபதி 67 படத்தில் லோகேஷின் ஆஸ்தான நடிகர்… அவரே சொன்ன செம்ம தகவல்!

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (11:06 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து விஜய் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

விக்ரம் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் பிருத்விராஜ், நடிகர் அர்ஜுன் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது லோகேஷுக்கு மிகவும் விருப்பமான நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகானுக்காக ‘தளபதி 67’ படத்தில் ஒரு ஸ்பெஷலான கதாபாத்திரத்தை எழுதி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். லோகேஷின் படங்களில் மன்சூர் அலிகானின் பாடல்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு அந்த பாடல்கள் ட்ரண்ட் ஆகவே மாறின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்