தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை பேன் இந்தியா படமாக ரிலீஸானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க சுனில் நாரங் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இருந்தும் இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்ததால் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படத்துக்குக் கிடைக்கவில்லை.
இந்நிலையில் முதல் வார இறுதியில் இந்தியாவில் இந்த படம் 35 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழை விட தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இதையடுத்து ஐதராபாத்தில் இந்த படத்தின் வெற்றி விழா நடந்தது. அதில் கலந்துகொண்ட படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கலந்துகொண்டு தனுஷை வாழ்த்திப் பேசினார்.