மணிரத்னத்தின் விளக்கம் திருப்திகரமாக இல்லை… பொன்ராம் ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (14:36 IST)
நவரசா ஆந்தாலஜியில் பொன்ராம் இயக்கிய படத்தை நீக்கிவிட்டு அவருக்குப் பதில் பிரியதர்ஷன் இயக்கிய படத்தை இணைத்தனர் படக்குழுவினர்.

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா ஆகியோர் இணைந்து நெட்பிளிக்ஸுக்காக நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். இந்த ஆந்தாலஜியில் இடம்பெற்ற 9 கதைகளும் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து உருவாக்கப்பட்டன.

இந்த படத்துக்கு கிரியேட்டிவ் ஹெட்டாக மணிரத்னம் உள்ளார். 9 படங்களையும் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், கே வி ஆனந்த், சர்ஜுன், பொன்ராம் ஆகியோர் ஒப்பந்தமானார்கள்.

இந்த 9 படங்களும் தயாரான நிலையில் இயக்குனர் பொன்ராமின் படத்தில் அவர்களுக்கு திருப்தி இல்லாததால் அதை நீக்க சொல்லிவிட்டனராம். இந்நிலையில் இப்போது இயக்குனர் பொன்ராம் அளித்துள்ள விளக்கத்தில் ‘எங்கள் படத்தைப் பார்த்த மணிரத்னம் படத்தின் ஆடியோ சரியில்லை என்று கூறினர். ஆனால் அவரின் அந்த விளக்கத்தில் எங்களுக்கு திருப்தியில்லை.’ எனக் கூறியுள்ளார். பொன்ராம் இயக்கிய அந்த படத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்