பொன்னியின் செல்வன் படத்துக்காக சொந்தக்குரலில் டப்பிங்… திரிஷா வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (15:41 IST)
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்துவருகின்றன.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

முதல்பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷா தான் நடிக்கும் குந்தவை பாத்திரத்துக்காக தானே சொந்தமாக டப்பிங் பேசி வருகிறார். இது சம்மந்தமான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்