விடாமுயற்சி படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ இயக்குனர் கொடுத்த ஒரு வரி விமர்சனம்!

vinoth

வியாழன், 6 பிப்ரவரி 2025 (13:04 IST)
அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸானது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு வெளிநாடுகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி ரசிகர்களால் பாஸிட்டிவ்வாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 9 மணிக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு தற்போது ரசிகர்கள் படம் பார்த்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதுவரை நேர்மறையான விமர்சனங்களே அதிகமாக வந்துகொண்டு இருக்கின்றன. படம் ரிலீஸாகும் நாளில் அஜித் போர்ச்சுகலில் ரேஸ் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கி வரும் ஆதிக் ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள திரையரங்கில் படம் பார்த்து தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் “விடாமுயற்சி பிளாக்பஸ்டர் மாமே’ என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அஜித் குமார் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்