உறுதியானது ஜீவி இரண்டாம் பாகம்… அறிவித்த படத்தொகுப்பாளர்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (15:37 IST)
ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை படத்தொகுப்பாளர் கே எல் பிரவீன் உறுதி செய்துள்ளார்.

வெற்றி கதாநாயகனாக நடித்த ஜீவி திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்ததால் படத்தின் வசூல் மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி களமிறங்கியுள்ளார். முதல் பாகத்தில் பணிபுரிந்த அதேக் கலைஞர்களே பணிபுரிய உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் முதல் பாகத்தில் பணிபுரிந்த அனைவரும் இதில் பணிபுரிய உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக படத்தொகுப்பாளர் கே எல் ப்ரவீன் படத்தின் இயக்குனர் வி ஜே கோபிநாத்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு மீண்டும் ஒரு முக்கோணவியல் விதி என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்