இன்ஸ்டாகிராமில் 7 மில்லியன் பாலோயர்ஸ்… ஏ ஆர் ரஹ்மான் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (15:09 IST)
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸாகியுள்ளது.

நேற்று வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களைப் பெரியளவில் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் விடுமுறை தினம் என்பதால் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட வாய்ப்புள்ளது. இதற்கிடையில் தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்துக்கு இசையமைத்துள்ள ஏ ஆர் ரஹ்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7 மில்லியன் இதயங்களோடு பொன்னியின் செல்வன் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்