தேசிய விருது பெற்ற சூர்யாவுக்கு வாழ்த்து கூறிய இந்தி நடிகர்

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (14:03 IST)
தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கலைத்துறைக்கான, 68வது  தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி   மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில்,  பிரபல பாலிவுட் நடிகரும்,  நடிகை கஜோலின் கணவருமான அஜய் தேவ்கான் தன் டுவிட்டர் பக்கத்தில், சூர்யாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், தன் துறை சார்ந்துள்ள நடிகர் சூர்யா  தேசிய விருதை வென்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  அவரது திறமைக்கு ஆழ்ந்த மரியாதை செலுத்துகிறேன்…அவர் படங்களை மிகவும் விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தேசிய விருது விழாவில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைராஅகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்