ராணாவின் ஸ்டுடியோவில் போதைமருந்து சோதனை?

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (18:23 IST)
ராணாவுக்குச் சொந்தமான ஸ்டுடியோவில், போதைப்பொருள் இருக்கிறதா என அதிகாரிகள் சோதனை நடத்திய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
தெலுங்குத் திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள் சிலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கடந்த சில மாதங்களாகப் புகார் எழுந்துள்ளது. காஜல் அகர்வாலின் மேனேஜர் கூட வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, எல்லா நட்சத்திரங்களையும் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வருகின்றனர் அதிகாரிகள்.

இந்நிலையில், நடிகர் ராணாவுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. அதை சோதனையிடுவதற்காக, ராணாவின் தந்தைக்குச் சொந்தமான ராமநாயுடு ஸ்டுடியோவுக்கு வந்துள்ளனர். ‘ராணாவின் முதுகு வலிக்காக வரவழைக்கப்பட்ட மருந்து அது’ என ராணாவின் தந்தை கூறியும், அந்த பார்சலை பிரித்து சோதனையிட்ட பிறகே அங்கிருந்து சென்றுள்ளனர் அதிகாரிகள். இந்த சம்பவம், தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்