நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் நேற்று இந்த படத்தின் முதல் தனிப்பாடல் ரிலீஸானது.
இந்நிலையில் இந்த படம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். அதில் “நானும் மணிரத்னமும் 40 ஆண்டுகளாக இணைந்து படம் பண்ணாமல் இருந்த தவறுக்கான பரிகாரம்தான் தக்லைஃப் படம். மிகச்சிறந்த படம் ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் 40 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளோம். 45 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் விவாதித்த ஒரு கதையை இப்போது படமாக எடுத்துள்ளதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” எனக் கூறியுள்ளார்.