நான் சிறு வயதில் திரை உலகிற்கு அறிமுகமான போது, ரஜினியுடன் நடிக்க என் அப்பா அனுமதி தரவில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் கமல் தான் பெரிய ஹீரோ என்று நினைத்திருந்தேன் என்றும், சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, கமல், ரஜினி உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது தெரிந்தது. ஆனால் ஆரம்ப கட்டத்தில் அவர் பாலிவுட் திரைப்படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த நிலையில், "ஏக் துஜே கேலியே", "சனம் தெரி கசம்" போன்ற பாலிவுட் படங்களை பார்த்து, கமல் தான் பெரிய ஹீரோ என்று நினைத்ததாகவும், அவரை ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் கூறினார்.
அப்போது, “ரஜினி சின்ன நடிகர்தான்” என்று நாங்கள் நினைத்தோம் என்றும், ஆனால் தமிழ் திரை உலகில் நான் நடிக்க வந்த பிறகு தான் “ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார்” என்பதை தெரிந்து கொண்டேன் என்றும் தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.