‘வேலை செய்வதுதான் எனக்குப் போதை’… ஏ ஆர் ரஹ்மான் பெருமிதம்!

vinoth

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (13:04 IST)
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர்  ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 33 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் தொடங்கிய அவரது இசைப் பயணம் தற்போது ஹாலிவுட் சினிமா வரை சென்றுள்ளது.

இப்போது தமிழில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ரஹ்மான் தக்லைஃப் படத்தின் இசையமைப்புப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் தன்னுடைய தனிவாழ்க்கையில் ஒரு நெருக்கடியை சந்தித்தார். அது சார்ந்து அவர் மேல் விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

இந்நிலையில் ரஹ்மான் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “வேலை செய்வதைதான் நான் போதையாக உணர்கிறேன். நான் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று சொல்லிக் கொள்கிறேன். என்னால் இன்னும் அதிக வேலை செய்ய முடியும் என்று தெரிந்து கொள்கிறேன்.” எனப் பெருமிதமாகக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்