ஆஸ்கர் வென்ற ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவுக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து..!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (10:20 IST)
ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு சிறந்த பாடலுக்கான விருது கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த பாடலை காம்போஸ் செய்த எம்எம் கீரவாணி மற்றும் பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. 
 
இந்த நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற ஆர்ஆர்ஆர்  பட குழுவிற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ‘நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் புகழ்பெற்றது என்றும் இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவு கூறப்படும் ஒரு பாடல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மதிப்பு மிக்க அங்கீகாரத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி பாடல் ஆசிரியர் சந்திரபோஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்றும் இந்த ஆஸ்கார் விருது மூலம் இந்தியா பெருமை கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இது குறித்து கூறிய போது ’ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற பெருமையை பெற்று வரலாறு படைத்துள்ளது என்று நாட்டு நாட்டு பாடல் மகத்தான சாதனை செலுத்த ஆர்ஆர்ஆர் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்