உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று நடந்த 'தக்லைஃப் சிங்கிள் பாடல் ரிலீஸ் விழாவில், "இன்னும் 49,000 திருமணத்திற்கும் அதிகமாக செய்வேன்" என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'தக்லைஃப் திரைப்படம், ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. "ஜிங்குச்சா" என்ற இந்த சிங்கிள் பாடலை, கமல்ஹாசன் எழுதி இருக்கிறார். இந்த பாடல் ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.
இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியின் போது, திரிஷாவிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் "திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அது நடந்தாலும் பரவாயில்லை, நடக்காவிட்டாலும் பரவாயில்லை" என்று கூறினார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் பேச வந்த போது, "ராமனை கும்பிடும் குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் எப்படி இரண்டாவது திருமணம் செய்யலாம்?" என்று என்னிடம் ஒரு எம்பி கேட்டார். அவரிடம் நான், "ராமர் வகையறா? அல்ல அவருடைய தந்தை வகையறா?" என கூறி, "இன்னும் 49,000 அதிகமான திருமணங்கள் பாக்கி இருக்கிறது" என்று காமெடியாக சொன்னது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.