தல பொங்கலா? தலைவர் பொங்கலா? மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (17:52 IST)
பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே இந்த பொங்கல் ரஜினி ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் சர்க்கரை பொங்கல்தான். 
 
படம் வெளியாவதர்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் பங்கமாய் காத்துகிடக்கின்றன. ரஜினி படமும் அஜித் படமும் நேரடியாக மோதுவது இதுவே முதல்முறை. 
 
இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டும் ஜில்லா மற்றும் வீரம் மோதியது. அதை தொடர்ந்து பெரிய நடிகர்களின் படம் சில வருடம் கேப்புக்கு பிறகு மோதுகிறது. 
ரஜினியின் படங்கள் தமிழகம் மட்டுமின்றி சர்வதேச அளவில் பேசப்படும் படங்கள். அஜித் படங்கள் தமிழகத்தில் அதிக வசூலை குவிக்கும் படமாக இருகின்றன. ஆனால் அஜித்துக்கு சமூகவலைத்தலங்களில் ரசிகர்கல் அதிகம் எனவே பட ப்ரமோஷன் தானாக நடக்கும். 
 
விஸ்வாசம் ரன்னிங் டைம் 2.30 நிமிடங்கள், ரஜினிகாந்தின் பேட்ட ரன்னிங் டைம் 2.50 நிமிடங்கள் அபப்டி பார்க்கும் போது விஸ்வாசம் அதிக ஸ்கீரின்களில் திரையிடப்பட அதிக வாய்ப்பு உள்ளது. 
இந்த இரண்டு படங்களில் எந்த படம் முதல் நாளிலேயே அதிக வசூலை அல்லும், அதிக நாட்கள் ஓடும் என்று அனைவரும் காத்திருக்கின்றன. ஆனால், படம் திரைக்கு வந்து ஒரு வாரம் கழித்தே வசூல் பற்றிய உண்மை நிலவரங்கள் கிடைக்கும். 
 
ஆக மொத்தம் காத்திருப்போம் தல பொங்கலா? தலைவர் பொங்கலா? என தெரிந்துக்கொள்ள....

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்