‘மார்க்கெட் இல்லாத ஹீரோவுக்கு நான் ஹிட் கொடுத்தேன்.. ஆனால் அவர்’ – சுந்தர் சி ஆதங்கம்!

vinoth

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (07:58 IST)
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சுந்தர் சி ஒரு வெற்றிகரமான இயக்குனராக உள்ளார். கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதுதான், அவருடைய வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர்  இயக்கிய ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து அவர் படத்தின் ப்ரமோஷனுக்காக பல நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார்.

அதில் ஒரு நேர்காணலில் அவர் பகிர்ந்த தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் “ஒரு ஹீரோவுக்கு அப்போது சுத்தமாக மார்க்கெட் இல்லை. அவரை அழைத்து வந்து நான் ஹிட் கொடுத்தேன். அவருடன் அடுத்தப் படம் பண்ணும் போது என்னை அவர் ஆயிரம் கேள்விகள் தொல்லைக் கொடுத்தார். அதனால் எனக்கு அந்த படத்தின் மேல் ஆர்வமே போய்விட்டது. அதனால் அந்த படம் சரியாக வரவில்லை” எனக் கூறியுள்ளார். சுந்தர் சி யார் அந்த ஹீரோ என சொல்லாவிட்டாலும் அவர் அர்ஜுனைப் பற்றிதான் சொல்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்