2018 டிசம்பர் 28ஆம் தேதி பேட்ட படத்தின் முன்னோட்டம் முதலில் வெளியானது. அதில் ரஜினிப் பேசிய சில வசனங்கள் அஜித் மற்றும் விஸ்வாசம் படத்தைக் கேலி செய்வது போல அமைந்ததால் டிரைலர் வைரலாக பரவியது. அதையடுத்து கோபத்தோடு காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது விஸ்வாசம் டிரைலர். பேட்ட டிரைலரில் ரஜினி பேசிய வசனங்களுக்குக் கவுண்ட்டர் கொடுப்பது போல அமைந்தன அஜித் பேசிய வசனங்கள்.
பேட்ட டிரைலருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டே நாட்களில் எப்படி விஸ்வாசம் குழுவினர் டிரைலரை தயார் செய்தனர் என விசாரணையில் இறங்கிய போது, பேட்ட டீமுக்கு நெருக்கமான ஒருவர்ட் முன்னதாகவே பேட்ட டிரைலரில் வரும் வசனங்களை விஸ்வாசம் டீமோடு பகிர்ந்துகொண்டதாகவும் அதன் மூலமே பதிலடிக் கொடுக்கும் டிரைலரை அவர்கள் உருவாக்கியதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் பரவிவருகிறது.