‘ஒக்கி’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (13:37 IST)
‘ஒக்கி’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என குரல் கொடுத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
சினிமாவில் இசையமைப்பது, நடிப்பதோடு மட்டுமின்றி, சமூக விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மிகப்பெரிய அளவில் பங்காற்றினார். தொடர்ந்து சமூக விஷயங்களுக்காக குரல் கொடுத்துவரும் ஜி.வி.பிரகாஷ், ‘ஒக்கி’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் குரல் கொடுத்துள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் அவசர உதவிகளை அரசு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சென்னை  வெள்ளத்தின்போது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒற்றுமையா இருந்து பல உதவிகள் செய்தோம். அந்த ஒற்றுமையை,  கன்னியாகுமரி, நெல்லை மக்களுக்கும் காட்ட வேண்டும். நானும் ஹெல்ப் பண்றேன், நீங்களும் பண்ணுங்க” என்று  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்