வடசென்னையின் ஸ்டைலிஷான முகம்தான் ‘ஸ்கெட்ச்’

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (11:42 IST)
விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படம், வடசென்னையின் ஸ்டைலிஷான முகத்தைக் காட்டும் வகையில் எடுக்கப்பட்டு வருவதாகத்  தெரிவித்துள்ளார் இயக்குநர் விஜய் சந்தர்.

 
 
பொதுவாக, வடசென்னை என்றாலே அழுக்கானவர்கள், ஏழைகள், படிப்பறிவில்லாதவர்கள், கெட்ட வார்த்தை பேசுபவர்கள்  என்றுதான் தமிழ் சினிமாவில் இதுவரை சித்தரிக்கப்பட்டு வந்தது. ஆனால், பா.இரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ போன்ற ஓரிரு  படங்கள்தான் அதை மாற்றின. 
 
அந்த வரிசையில், ‘ஸ்கெட்ச்’ படமும் இணைந்திருப்பதாகக் கூறியுள்ளார் இயக்குநர் விஜய் சந்தர். டாக்டர்கள், வக்கீல்கள் என  நன்றாகப் படித்து உயர்ந்த பதவியில் இருப்பவர்களையும், நன்றாக செட்டில் ஆனவர்களையும் இந்தப் படத்தில்  காண்பித்திருக்கிறாராம். அதாவது, ஸ்டைலிஷான நார்த் மெட்ராஸை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்கிறார்கள். இந்தப்  படத்தில், கேங்ஸ்டராக விக்ரம் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்