பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவான கல்கி திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இந்த படத்துக்குப் பிறகு தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் புதுப் படத்துக்காக இணைந்துள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் தலைப்பு ராஜா சாப் என அறிவிக்கப்பட்டு முதல் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
இந்நிலையில் தற்போது பிரபாஸின் ஸ்டைலிஷான லுக்கில் ராஜாசாப் படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. படம் ஏப்ரல் 10 ஆம் தேதி அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதற்கு அவர் ஒத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர் சம்மந்தமானப் பாடல்காட்சி அடுத்த மாதம் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.