சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்… சம்மந்தப்பட்ட காட்சி நீக்கப்பட்டதா?

vinoth
திங்கள், 18 நவம்பர் 2024 (09:58 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாகி இன்று நெட்பிளிக்ஸில் ரிலீஸாகியுள்ளது.

இந்த திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் தாமதமாக இந்த வீடியோ வெளியாக நடிகரும் நானும் ரௌடிதான் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ்தான் காரணம் என நயன்தாரா குற்றம் சாட்டினார். நானும் ரௌடிதான் காட்சிகளைப் பயன்படுத்த அனுமதி கேட்ட நிலையில் 2 ஆண்டுகளாக அதற்கு அனுமதிக்காமல் இழுத்தடித்தார் என்று கூறினார்.

மேலும் நானும் ரௌடிதான் ஷூட்டிங்கில் மொபைல் போனில் எடுக்கப்பட்ட காட்சியை டிரைலரில் பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவர் நோட்டீஸ் அனுப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்ததை அடுத்து இரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. டிரைலரில் இடம்பெற்ற மூன்று வினாடிக் காட்சி நீக்கப்படாமலேயேதான் அந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ்- நயன்தாரா புகைச்சல் இத்துடன் ஓயப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்