அஜித், ரஜினி, கமல் என ரவுண்ட் கட்டும் நயன்தாரா?

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (19:10 IST)
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

நயன்தாரா தனது செக்கெண்ட் இன்னிங்சை துவங்கியது முதல் கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும், ஹிரோயினுக்கு முக்கியதுவம் உள்ள கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். இது அவருக்கு வெற்றியை கொடுத்தது. 
 
இதற்கு முன்னர் பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு சென்றுவிட வேண்டும், எனவே பெரிய ஹிரோக்களுடன் நடிப்பதாக இல்லை என தெரிவித்தார். ஆனால், தற்போது அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
 
மேலும், தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடித்தார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் இவரே நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிறது. 
 
கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் இவர் நடிக்க உள்ளாராம். அதோடு இல்லாமல் மலையாளத்தில் மம்முட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்