கிளாமர் டிரஸ்ஸில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் வைரலாகும் அட்டகத்தி நந்திதா!

vinoth
சனி, 1 ஜூன் 2024 (10:27 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.  ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது.

அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். அதன் பின்னர் அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இந்நிலையில் இப்போது தான் பைப்ரோமியால்ஜியா என்ற அரியவகை தசை கோளாறு  நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்போது அவருக்கு சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் கிளாமரான போட்டோஷூட்களை நடத்தி அவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nandita Swetha (@nanditaswethaa)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்