மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிக் கவலையில்லை.. ரியான் பராக் பதில்!

vinoth

வெள்ளி, 31 மே 2024 (08:39 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக் தனது திறமையான அல்ரவுண்ட் பர்ஃபாமன்ஸ் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் அவர் இருந்தார். அவர் 577 ரன்கள் சேர்த்துள்ளார். இதனால் அவர் மேல் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. விரைவில் அவர் இந்திய அணிக்காக தேர்வாகலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய லேப்டாப்பில் வீடியோ கேம்கள் விளையாடுவதை லைவ் ஸ்ட்ரீமிங்கில் ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் யுட்யூபில் ஏதோ ஒரு இசைத் தொகுப்பை தேடினார். அந்த நேரத்தில் அவர் யுட்யூப் சர்ச் ஹிஸ்டரியில் அவர் பாலிவுட் நடிகைகளான சாரா அலிகான் ஹாட், அனன்யா பாண்டே ஹாட் என்ற பெயர்களில் வீடியோக்களைத் தேடி பார்த்துள்ளது தெரியவந்தது. இது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் ரியான் பராக் தன்னுடைய ஃபார்ம் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர் “தோல்வியில் இருந்து வெளிவருவது எனக்கு எளிதுதான். சில போட்டிகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் இந்திய அணிக்கு ஆடமாட்டேன் என சொன்னார்கள். இப்போது என்னை இந்திய அணியில் ஏன் எடுக்கவில்லை எனக் கேட்கிறார்கள். இந்திய அணிக்கு நான் விளையாடுவது உறுதிதான். ஆனால் அதற்கு 6 மாதமோ அல்லது ஒரு வருடமோ ஆகலாம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்