வருகிறது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம்… நயன்தாராவுக்கு பதில் இந்த நடிகையா?

vinoth

வெள்ளி, 31 மே 2024 (08:18 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டுதில் ஓடிடியில் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் சமீபகாலமாக ஆர் ஜே பாலாஜியின் படங்கள் எதுவும் ஓடாத நிலையில் இப்போது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதால் அவருக்கு பதில் த்ரிஷாவை அம்மன் வேடத்தில் நடிக்க மறுத்ததால் இப்போது அந்த வேடத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. மேலும் முதல் பாகத்தைத் தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தை விட்டு வேறு ஒரு நிறுவனத்துக்கு படம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்