சிம்புவுக்கு தங்கையான கதாநாயகி நடிகை – காரணம் இதுதானாம்!

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (16:24 IST)
நடிகை நந்திதா ஸ்வேதா சிம்புவின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரம் நடைபெறும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பாக சிம்பு சுசீந்திரன் இயக்கும் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி திண்டுக்கல் அருகே நடந்து வருகிறது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ள நிலையில் சிம்புவின் தங்கையாக நடிகை நந்திதா ஸ்வேதா நடிக்க உள்ளாராம். பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள நந்திதாவின் இந்த முடிவுக்கு வாய்ப்புகள் இல்லாததுதான் காரணமாம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்