சுஷாந்த் மரணம் தொடர்பான கருத்துகள், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு சிவசேனாவுடன் மோதல் என பாலிவுட்டில் இப்போது கங்கனா மோதாத நபர்களே இல்லை என்ற அளவுக்கு எல்லோருடனும் சண்டை போட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி விதிகளை மீறி கங்கனாவின் அலுவலகம் கட்டப்படுவதாக மும்பை நகராட்சி கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்தது.
இந்நிலையில் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மேலும் அவர் சகோதரி மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை விசாரித்த மும்பை பாந்த்ரா பெருநகர மாஜிஸ்திரேட் கங்கணா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள கங்கனா ‘நான் சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போன்றோர்களை நான் பின்பற்றுகிறேன் லட்சுமி பாயின் கோட்டை உடைக்கப் பட்டது போல என்னுடைய வீடும் உடைக்கப்பட்டது. சாவர்க்கரை சிறையில் தள்ளியது போல என்னையும் இவர்கள் சிறையில் தள்ள முயற்சி செய்து வருகின்றனர்.’ என்று கூறியுள்ளார்.