கார்த்தி & நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகும் புது படம்.. தொடங்குவது எப்போது?

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (14:49 IST)
இயக்குனர் நலன் குமாரசாமி காதலும் கடந்து போகும் படத்துக்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து படம் இயக்க உள்ளார்.

சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின்னர் நலன் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகளாக இயக்குனர் நலன் இதுவரை எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார்.  முதலில் ஆர்யா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நலனின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தை பிப்ரவரி இறுதியில் பூஜையோடு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்னதாக கார்த்தி ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் படத்தில் நடித்து முடிப்பார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்