விஜய் அஜித் இணைந்து நடித்த படம் பொங்கலுக்கு முன் ரி ரிலீஸ்…!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (14:44 IST)
விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் இருவர்களாக இருந்து வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் படங்களும் பொங்கலுக்கு ஒரே நேரத்தில் வெளியாகின்றன. இதனால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகளை இரு படக்குழுவினரும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தை இந்த வாரம் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அஜித் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்