கமலும் நடிக்கிறார்… நானும் நடிக்கிறேன் – நதியா ஜாலி பதில்!

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (09:14 IST)
நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80 களின் இறுதி மற்றும் 90 களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அவர் மீண்டும் எம் குமரன் திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் தனது இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் கமல் கூட நடிக்கவே இல்லை. கமல் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு உருவான விக்ரம் படத்திலேயே அவர் தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால் கமல் அவரை அந்த படத்துக்காக தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில் இப்போது எல்ஜிஎம் படத்தில் நடித்துள்ள நதியாவிடம் கமல்ஹாசனோடு இணைந்து நடிப்பது எப்போது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “கமல்ஹாசனும் நடிக்கிறார், நானும் நடிக்கிறேன்… வாய்ப்பு அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்