போண்டா மணியை மருத்துவமனையில் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்… நடிகர்களிடம் உதவி கேட்டு கோரிக்கை

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (15:30 IST)
சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போண்டாமணியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் சந்தித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான போண்டா மணி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கபட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவி செய்ய வேண்டும் என சக நடிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் போண்டா மணியை நேரில் சந்தித்து அவருடைய சிகிச்சை செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் என்று தெரிவித்தார்.  மேலும் நடிகர் சங்கம் சார்பாக நடிகர் மனோபாலாவும் சென்று அவருக்கு நிதியுதவி அளித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுகவில் பல ஆண்டுகளாக இருந்த நிலையில் இன்று அவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து நிதியுதவி அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போண்டாமணி “நான் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துள்ளேன். அவர்கள் எனக்கு உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்