அன்பு இதயங்களுக்கு என் இதய நன்றி- விக்ரம்

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (15:44 IST)
.
தமிழ் சினிமாவில்  முன்னணி இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் நேற்று, வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படத்தில்,  விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

உலகத் தமிழர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன்  டிக்கெட் புக்கிங்கிலேயே சாதனை படைத்த  நிலையில்,  ரிலீஸான நேற்று முதல் நாள் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில்,  இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக  நடித்துள்ள விக்ரம் இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,

எங்க ஆரம்பிக்கிறது…தேங்க்ஸ்… நன்றி…சுக்ரியா…எந்த மாதிரி சொன்னாலும் கேட்கறதுகு ஃபீல் பண்றதுக்கு அவ்வளவு நல்லா இருக்குது…பொன்னியின் செல்வன் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, ஆதித்ய கரிகாலச் சோழனுக்கு கிடைத்த அந்த ஆக்ரோசமான ஃபீட் பேக் ரொம்ப தேங்ஸ்…இட்ஸ் லைக் நான் நிறைய படங்கள் பண்ணிருக்கேன்…நான் எப்பவும் என் படங்கள் நினைச்சுப் பெருமப்படுவேன்…இப்ப இந்தப் படத்தை எங்கள் படம்னு கொண்டாடறீங்கள்…இதவிட பெரிய சந்தோசம் வேற கிடைக்காது. அதுக்கு மணிசார், தேங்ஸ் டு எவ்ரியொன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்