ரம்ஜான் அன்னைக்கு நான் பண்ணுனது தப்புதான்..! - நீண்ட காலம் கழித்து மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!

Prasanth Karthick

செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (17:32 IST)

ரம்ஜான் அன்று ஏழைகளுக்கு உதவி செய்து இர்ஃபான் போட்ட வீடியோ சர்ச்சைக்குள்ளான நிலையில் அதுகுறித்து நீண்ட காலம் கழித்து அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

பிரபல யூட்யூபரான இர்ஃபான் ஆரம்பத்தில் உணவகங்கள் சென்று சாப்பிட்டு அதை மதிப்பிட்டு வீடியோ வெளியிட்டதன் மூலம் பிரபலம் ஆனார். ஆனால் சமீபமாக அவர் அவ்வாறான Food Vlogகை விட்டுவிட்டு சொந்த வாழ்க்கையின் சம்பவங்களை வீடியோவாக வெளியிட்டு சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார்.

 

முன்னதாக தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலியல் அடையாளத்தை வெளிப்படுத்தியது, குழந்தைப்பேறு சமயத்தில் சிகிச்சை அறையில் தொப்புள் கொடியை கட் செய்தது என பல சர்ச்சைகளை ஏற்படுத்திய இர்ஃபானின் சமீபத்திய சர்ச்சைதான் ரம்ஜான் உதவி வீடியோ.

 

ரம்ஜான் அன்று இல்லாத ஏழை மக்களுக்கு உணவும், உடையும் வழங்க அவரும், அவரது மனைவியும் சென்றபோது அந்த மக்களை திட்டியதோடு, அவர்கள் காருக்குள் கைவிட்டது குறித்து பேசி இளக்காரமாக சிரித்தது பலரையும் ஆத்திரப்படுத்தியது. இதுகுறித்து அப்போதே பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் இர்ஃபான் மௌனமாகவே இருந்து வந்தார்.

 

இந்நிலையில் அதுகுறித்து தற்போது பேசியுள்ள இர்ஃபான் ரம்ஜானை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் தந்தபோது நான் நடந்து கொண்ட விதம் தவறுதான். ஆனால் இல்லாதவர்களை பார்த்து சிரிக்கும் ஆள் நான் அல்ல. அது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது என்றும், அன்றே இதுபற்றி பேசியிருந்தால் மேலும் தவறாக போய்விடும் என்பதால் தற்போது விளக்கம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் பிரபலம் என்பதால் ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் சரியாய் போய் விடுமா என்பது நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்