கலைஞரோடு என்னை சேர்த்துவைத்தவர் முரசொலி செல்வம்… இயக்குனர் எஸ் ஏ சி அஞ்சலி!

vinoth
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (12:12 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் சகோதரி செல்வியின் கணவர் முரசொலி செல்வம் நேற்று பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.  இவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தம்பியாவார். முரசொலி பத்திரிக்கையியின் பொறுப்பாசிரியராக பல ஆண்டுகள் இருந்து வந்தவர். அவருக்கு வயது 83.

அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் நெருங்கிய நண்பர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலுக்கு விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு பேசிய அவர் “முரசொலி செல்வம் என் நீண்டகால நண்பர். 1984 ஆம் ஆண்டு முதல் முதலாக கலைஞரோடு என்னைப் பேச வைத்தார். நான் கலைஞரோடு இணைந்து ஒரு படமாவது பண்ணவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் மூன்று படங்கள் உருவாக்கினோம். அத்தனைக்கும் துணையாக இருந்தவர் செல்வம்தான்.” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்