முரசொலி செல்வம் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது -என்.இராமசாமி!

J.Durai

வியாழன், 10 அக்டோபர் 2024 (16:27 IST)
கலைஞரின் மருமகன் முரசொலி செல்வம் காலமானார்.
 
இது குறித்து 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி வெளியிட்டுள்ளார் அறிக்கையில் குறிப்பிட்டதாவது.....
 
கலைஞரின் கைவண்ணத்தில் உருவான மாடி வீட்டு ஏழை, பாலைவன ராஜாக்கள், புயல்பாடும் பாட்டு, பாடாத தேனீக்கள், பாசப்பறவைகள் படங்கள் மட்டுமின்றி
எனது தந்தை டைரக்ட் செய்த குற்றவாளிகள், 
இது எங்க நாடு, திருட்டு ராஜாக்கள், உட்பட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தவர் முரசொலி திரு.செல்வம் அவர்கள். 
 
முரசொலி நாளிதழின் ஆசிரியர் மற்றும் அதன் வெளியீட்டாளராகவும் இருந்தவர். கன்னட மொழியில் உள்ள
உதயா தொலைக்காட்சியை திறம்பட நிர்வகித்து வந்தவர். சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகியவர்.  எங்களது  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், குறிப்பாக என் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர். திறமையானவர்களுக்கும், நட்பு வட்டாரத்தில் இருந்தவர்களிடம் மட்டுமல்ல பலருக்கும் பல்வேறு வகையில் உதவி புரிந்து வந்தவர். 
 
மரியாதைக்குரிய முரசொலி திரு.செல்வம் அவர்களின் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது. அவரது மறைவிற்கு எங்களின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பிலும், நான் சார்ந்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
 
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்  என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்