உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’ படத்தைப் பார்த்த மோகன்லால், அவரைப் பாராட்டியுள்ளார்.
தங்களுடைய படத்தை புரமோட் செய்வதற்காக, மிகப்பெரிய பிரபலங்களுக்கு தங்கள் படத்தைப் போட்டுக்காட்டி, அவர்களைப் பேசவைப்பது தமிழ் சினிமாவின் தற்போதைய வழக்கமாக இருக்கிறது.
அதுவும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு போட்டுக் காட்டி, அவருடைய பாராட்டுகளைப் பெற்று புரமோஷனாகப் பயன்படுத்திக் கொள்ள அனைவரும் போட்டி போடுகின்றனர். அவருடைய துரதிருஷ்டம், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தைக் கூட நல்லாருக்குனு சொல்ல வேண்டிய நிலமை.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’ படத்தை, மலையாளத்தில் முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு போட்டுக் காட்டியுள்ளனர். இந்தப் படத்தை இயக்கிய பிரியதர்ஷன் மோகன்லாலுக்கு நண்பர் என்பதாலும், மலையாளத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் இது என்பதாலும் மோகன்லாலுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது.
படத்தைப் பார்த்த மோகன்லால், உதயநிதி ஸ்டாலினைப் புகழ்ந்துள்ளார். இந்தப் படம் ரிலீஸுக்குப் பிறகு சக்சஸ் மீட் வைப்பது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயின்களாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர். தர்புகா ஷிவா மற்றும் அஜ்னீஸ் லோக்நாத் இருவரும் இசையமைத்துள்ளனர்.