’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

Siva

செவ்வாய், 15 ஜூலை 2025 (18:46 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் ஒரே ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், விரைவில் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், 'கூலி' படத்துக்கு ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், டீசர் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வேண்டாம் என்று லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு தரப்பிடம் சொன்னதாக ஒரு செய்தி யூடியூப் உள்ளிட்ட சில தளங்களில் பரவி வருகிறது. ஆனால், அதில் துளி கூட உண்மை இல்லை என்றும், படத்தின் ப்ரோமோஷனுக்கு டீசர் மற்றும் ட்ரெய்லர் மிகவும் முக்கியம் என்பதால், இரண்டுமே அடுத்தடுத்து வெளியாகும் என்றும் தயாரிப்பு தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.
 
அதே நேரத்தில், 'கூலி' படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பேட்டி அளிக்கும் போது, கூலி படத்தின் முக்கிய தகவல்களை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பு தரப்பு கேட்டுக் கொண்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி உண்மைதான் என்றும், இது குறித்த தகவல் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு சென்றுள்ளதாகவும் படக்குழுவினரை நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்