ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

Mahendran

செவ்வாய், 15 ஜூலை 2025 (18:19 IST)
விஜய் நடித்த 'துப்பாக்கி', சூர்யா நடித்த 'அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மதராஸி' என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' (Street Fighter) என்ற ஹாலிவுட் திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இந்தத் திரைப்படத்தில்தான் வித்யுத் ஜம்வால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிரபல வீடியோ கேம் அடிப்படையிலான கதை அம்சத்தை கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த கேம் 2021 ஆம் ஆண்டு சிறந்த சண்டை கேம் என்ற விருதையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தில் வித்யுத் ஜம்வால் 'யோகி' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவரது கதாபாத்திரம் தான் படத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்