வடிவேலுவை பார்க்கவே ரிப்பீட் ஆடியன்ஸ் வருவார்கள்… இசையமைப்பாளர் கீரவாணி கருத்து

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (08:09 IST)
ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் கீரவாணி “சந்திரமுகி 2 படத்தை அனைவரும் பார்ப்பார்கள். படத்தை இரண்டாவது மூன்றாவது முறை பார்க்க வடிவேலுக்காகவே வருவார்கள். அவர் இல்லைஎன்றால் சந்திரமுகியே கிடையாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்