’ஜெயிலர்’ படத்தின் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்..!

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (15:25 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன. 
 
இந்த நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் இந்த படத்தின் இதுவரையிலான வசூல் குறித்த நிலவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
’ஜெயிலர்’ திரைப்படம் தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் ரூ.525 கோடி வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 
’ஜெயிலர்’ படத்தின் வசூல் குறித்த நிலவரங்கள் அவ்வப்போது வதந்தி என்று புளூசட்டை மாறன் உள்ளிட்டோர் கூறி வந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்