சிம்புவினால் நடுத்தெருவில் நிற்கின்றேன் - தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் வேதனை

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (11:30 IST)
நடிகர் சிம்புவினால் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நிற்பதாக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார்.


 

நடிகர் சிம்பு மீது மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
 
மிருதன் படம் முடிந்த பிறகு சிம்பு என்னை தொடர்புக்கொண்டு உங்களுக்கு நான் கால்ஷீட் தருகிறேன் என்று கூறினார். ரொம்ப பொறுமையாகவும் நல்ல விதமாகவும் பேசினார். சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வருவேன். நான் எல்லாவற்றையும் உணர்ந்து விட்டேன். என் கையில் 5000 ரூபாய் கூட இல்லை. என்னை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். பணத்தின் மதிப்பு இப்போது தான் தெரிகிறது. நான் இதை என் படம் போல நினைத்து முடித்து தருகிறேன் என்று கூறினார். ஆனால் அவர் சொன்ன மாதிரி நடந்து கொள்ளவில்லை.


 
ஜனவரி மாதம் கால்ஷீட் தருகிறேன் என்று கூறி என்னை அலைக்கழித்தார். படப்பிடிப்பிற்கும் சரியாக வரவில்லை. வந்தால் 5 நிமிடம் அல்லது 10 நிமிடம்தான் நடிப்பார். எனவே, கதைப்படி படத்தை எடுக்க முடியவில்லை. இதனால் படம் படுதோல்வி அடைந்தது. 
 
எடுக்கப்பட்ட சில காட்சிகளை வைத்து இரண்டாம் பாகம் எடுங்கள். நான் நடித்துக்கொடுக்கிறேன் எனக் கூறினார். ஆனால், தற்போது என் தொலைப்பேசி அழைப்பையே அவர் எடுப்பதில்லை. இந்தப்படத்தால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கு சிம்புதான் பொறுப்பு. சிம்புவால் வீடு, வாசல் அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றேன். சிம்புவிடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்