13 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரைப்படம் இயக்கும் சீரிய இயக்குனர்!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (15:50 IST)
மெட்டி ஒலி உள்ளிட்ட சீரியல்களை இயக்கி அதன் மூலம் பிரபலமான இயக்குனரான திருமுருகன் எம்டன் மகன் மூலமாக சினிமாவில் கால்பதித்தார்.

மெட்டி ஒலி தொடர் கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் சன் டீவியில் ஓளிப்பரப்பாகி மக்களின் ஆரவார செல்வாக்கைப் பெற்றது. தமிழ் தொலைக்காட்சி உலகில் முதன் முதலில் 1000 எபிசோட்கள் ஒளிப்பரப்பப்பட்ட தொடரும் இதுவே ஆகும். இந்த நாடகத்தை இயக்கி அதில் முக்கியக் கதாபாத்திரமான கோபி எனும் கேரக்டரில் நடித்தார் இயக்குனர் திருமுருகன்.

இதையடுத்து அவர் பரத், கோபிகா மற்றும் நாசர் நடிப்பில் உருவான எம் மகன் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப் படமாக அமைந்தது. அதையடுத்து அவர் பரத்தை வைத்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி நாதஸ்வரம் உள்ளிட்ட தொடர்களை இயக்கினார்.

இதையடுத்து இப்போது 13 ஆண்டு இடைவெளியில் அவர் மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்தை எம் மகன் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனமே மீண்டும் தயாரிக்க உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்