மலையாளத்தில் சலசலப்பை ஏற்படுத்திய படம்… தமிழில் ரீமேக்!

வியாழன், 18 பிப்ரவரி 2021 (15:28 IST)
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய விமர்சனங்களை பெற்ற திரைப்படமான கிரேட் இந்தியன் கிச்சன் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குநர் ஜோ பேபி இயக்கிய த கிரெட் இந்தியன் கிச்சன் திரைப்படம் Neestream தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் மொழி தாண்டியும் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிஸ்கோத் படத்தின் இயக்குனர் கண்ணன் வாங்கியுள்ளாராம். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் அவரே இயக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்