‘மெர்சல்’ படத்தின் பட்ஜெட் ரூ. 135 கோடி

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (17:55 IST)
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படம், 135 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத்  தெரியவந்துள்ளது.

 
 
விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், காஜல்  அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்று இதுநாள்வரை கூறப்பட்டு வந்த  இந்தப் படத்தின் உண்மையான பட்ஜெட், தற்போது தெரியவந்துள்ளது.

‘மெர்சல்’ படத்தின் அமெரிக்க விநியோக உரிமையை,  இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து வாங்கியிருக்கின்றன. அதில் ஒரு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 135 கோடி ரூபாய் செலவில் ‘மெர்சல்’ தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்