இவரது பிறந்தநாளில்தான் மெர்சல் டீஸர் வெளியாகிறதா?

வியாழன், 14 செப்டம்பர் 2017 (10:28 IST)
விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மெர்சல் படத்தில்  நடித்து வருகிறார். விஜய்யின் வித்தியாசமாக மூன்று வேடத்தில் நடித்திருக்கும் படம் மெர்சல்.

 
இந்த படத்தின் டீஸருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர், இதனால் மெர்சல் பீவர் என்ற ஹாஸ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக  நடந்ததையடுத்து, ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது டீஸரைதான்.
 
இந்நிலையில் படக்குழு எப்போது டீஸர் என்ற தகவலை இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இப்பட இயக்குனர் அட்லீ பிறந்தநாள் வரும் செப்டம்பர் 21ம் தேதி. அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மெர்சல் பட டீஸர் வெளியாகும் என்று  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்