சசிகுமார், புகழ், ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த அயோத்தி திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விப் படங்களாகவே கொடுத்து வந்த சசிகுமாருக்கு இந்த படம் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. பின்னர் ஓடிடியில் வெளியாகி அங்கும் பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தியின் அடுத்த படம் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
மந்திரமூர்த்தி இயக்கும் அடுத்த படத்தில் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது. இந்த படத்தை தமிழ் படங்களின் இந்தி டப்பிங் உரிமையை வாங்கும் பிரபல நிறுவனமான கோல்ட்மைன் நிறுவனத்தின் சார்பாக மனிஷ் என்பவர் தயாரிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.