இந்தி படத்துக்காகதான் ‘புறநானூறு’ படத்தைக் கைவிட்டாரா சூர்யா?

vinoth

வெள்ளி, 29 நவம்பர் 2024 (08:19 IST)
சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கைமாறியது. படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சூர்யா ஏன் கைவிட்டார் என்று தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி “புறநானூறு திரைப்படம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை  மையப்படுத்தி உருவாகும் கதை. ஆனால் சூர்யா அப்போது இந்தி சினிமாவில் நேரடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதனால் புறநானூறு கதையில் நிறைய மாற்றங்களை சொன்னதால்தான் அந்த படமே கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது சூர்யா நடிக்க இருந்த பாலிவுட் படமான ‘கர்ணா’ கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்