பழம்பெரும் நடிகர் ரா சங்கரன் காலமானார்.. ‘மெளன ராகம்’ சந்திரமெளலி கேரக்டரில் நடித்தவர்..!

வியாழன், 14 டிசம்பர் 2023 (13:46 IST)
தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் ரா. சங்கரன் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவை அடுத்து திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
 
கடந்த 1931 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடிகர் ரா சங்கரன் பிறந்தார். கடந்த 1974 ஆம் ஆண்டு ’ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணே என்ற படத்தில் அறிமுகமானவர், தேன் சிந்துதே வானம், தூண்டில் மீன், ஆடிப்பெருக்கு, ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, உனக்காகவே வாழ்கிறேன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, அமரன், சின்ன கவுண்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’மெளனராகம்’ என்ற திரைப்படத்தில் ரேவதி தந்தையான சந்திரமௌலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தேன் சிந்துதே வானம் உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வயது முதிர்வு காரணமாக இன்று நடிகர் ரா. சங்கரன் காலமானதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்