ரஜினியின் பாட்ஷா படத்தை நான் இயக்க வேண்டியது – மனம் திறந்த மனோ பாலா !

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (10:49 IST)
தமிழ் சினிமாவில் முக்கியமான நகைச்சுவை நடிகராகவும் முக்கியமான இயக்கனராகவும் திகழும் மனோ பாலா பாட்ஷா படம் பற்றி மனம்திறந்து கூறியுள்ளார்.

தமிழ் வனிகா சினிமாவின் மைல்கல் படம் என்றால் அது ரஜினி நடித்த பாட்ஷா என்று சொல்வதில் மிகையில்லை. பாட்ஷாவுக்குப் பிறகு அதுபோல பல படங்கள் வெளியாகின. இந்தப்படம் அமிதாப் நடித்த இந்திப் படத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை ஒரிஜினலை விட சிறப்பாக இயக்கி ரஜினியின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

ஆனால் இந்தப்படத்தை முதலில் இயக்க வேண்டியது இயக்குனர் மனோபாலாதான். சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் இதை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அதில் ‘சத்யா மூவிஸ் சார்பாக ரஜினி நடிக்கும் படத்தின் கதையை என்னிடம் சொன்னார்கள். நான் அதில் சில திருத்தங்களை செய்து முடித்தேன். ஆனால் திடீரென அந்தப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கப் போவதாக அறிவ்ப்பு வந்தது. நான் நேராக ரஜினியிடம் சென்று இதுபற்றிக் கேட்டேன். அவர் ’இதைப்பற்றி ஒன்னும் கேக்காதீங்க… நாம் மீண்டும் வேறொருப் படத்தில் பணிபுரியலாம்’ என்றார். ஆனால் அதன் பின்னர் நாங்கள் அதன் பின் இணைந்து பணிபுரியவே இல்லை’ என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்