ரஜினி முதல்வராக யாகம் நடத்தும் அண்ணன் சத்தியநாராயண ராவ்!

வெள்ளி, 21 ஜூன் 2019 (09:56 IST)
நடிகர் ரஜினிகாந்த் வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பு யாகம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த யாகத்தில் ரஜினி ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியலுக்கு வரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர் ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பித்து அதன் கிளைகள், நிர்வாகிகள் ஆகியோர்களை நியமனம் செய்து அதனை ஒரு அரசியல் கட்சியாக மாற்றுவதற்காக ஏற்பாடுகளை செய்து தயாராக உள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும்போது அவரது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது
 
அதிமுக ஆட்சிக்கு தற்போது பெரும்பான்மை இருப்பதால் அந்த ஆட்சி வரும் 2021ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என தெரிகிறது. ஆட்சியை கவிழ்க்க திமுக தரப்பு எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் ஆட்சிக்கு 2021ஆம் ஆண்டு வரை ஆபத்து இல்லை என கூறப்படுகிறது. எனவே 2021ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில்தான் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கு முன்னதாக 2021ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ரஜினி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் வரும் 2021ஆம் ஆண்டு ரஜினி முதல்வராக வேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவரது அண்ணன் சிறப்பு யாகம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்